நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும் பிரபல நடிகருமான பிரபு கொழுக் மொழுக் தோற்றத்தில் வெகுளியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழக மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக, இவர் நடிப்பில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களே அதிகம். சங்கிலி திரைப்படத்தில் இருந்து நடித்துவரும் இவர் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை வென்றார். இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் உருவான சின்னத் தம்பி திரைப்படத்திற்காகப் விருது பெற்றார். அப்படத்தின் போது குஷ்புவுடன் காதல் வயப்பட்டு கிசுகிசுக்கப்பட்டார். ஆனால், அவரது காதலுக்கு அப்பா சிவாஜி எதிர்ப்பு தெரிவிக்கவே புனிதா என்ற வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார்.
இந்நிலையில், பிரபல நடிகை லட்சுமியின் மகளும் நடிகைமான ஐஸ்வர்யா நடிகர் பிரபு குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில், எனக்கு 16 வயது இருக்கும்போது நடிகர் பிரபுவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் அவ்வளவு அழகாக இருப்பார். அவருடைய, சிரிப்பை பார்த்தாலே மயங்கிடுவேன். அப்போதிலிருந்து, எனக்கு அவர் மீது காதல் இருந்தது. இன்னும் அந்த காதல் ஓயவில்லை. நான் பிரபு மீது வைத்துள்ள காதல் பற்றி அவருடைய மனைவி புனிதாவிற்கும் தெரியும். நான் அவருடைய வீட்டின் அருகே வந்து விட்டேன். நீ பெரிய வீடா வச்சுக்கோ சின்ன வீடா நான் வெச்சிருக்கிறேன் என்று கிண்டல் செய்தேன் என்று கூறியுள்ளார். இந்த விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.