வயசுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோ.. ஐஸ்வர்யாவை மிரட்டிய ரஜினி -ஆடியோ லான்சுக்கு வராததற்கு இதுதான் காரணம்..!
Author: Vignesh3 August 2023, 1:00 pm
கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.
தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.
பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், இருவரும் இன்றுவரை சட்டபூர்வமாக விவாகரத்து செய்ய அணுகவில்லை என்று கூறப்பட்ட நிலையில், தனுஷ்சை பிரிந்த பின் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா தன் அப்பா ரஜினிகாந்த்தை வைத்து சிறப்பு தோற்றத்தில் நடித்துவரும் லால்சலாம் படத்தினை இயக்கி வரும் நிலையில், ஐஸ்வர்யா தனுசை பிரிந்து ஒரு வருடமான நிலையில், ஒரு இளம் இயக்குனரை இரண்டாம் திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகளுடன் ஏற்பட்ட பிரச்சனை பற்றி பேசியுள்ளார். சூப்பர் ஸ்டார் சில தினங்களுக்கு முன்பு மாலத்தீவுக்கு செல்லும்போது கூட ஐஸ்வர்யாவை உடன் அழைத்துச் செல்லவில்லை என்றும், ரஜினிக்கு அவர் மீது கோபம் இருப்பதால்தான் ஐஸ்வர்யாவை விட்டு சென்றுவிட்டார் என்றும் தெரிவித்திருந்தார்.
அதற்கு காரணம் தனுசை பிரிந்திருக்கும் நிலையில், இயக்குனரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து வருவது தான் என்றும், அவரை விரைவில் திருமணம் செய்ய போவதாகவும், ரஜினியிடம் இதுகுறித்து கூறியதால் கோபத்தில் ரஜினி ஐஸ்வர்யாவை திட்டி உள்ளார். இதனால் தான் ரஜினியின் ஜெய்லர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ஐஸ்வர்யா செல்ல வில்லையாம்.
இரண்டாம் மகள் சௌந்தர்யா வந்திருக்கும் நிலையில், ஐஸ்வர்யா என் வரவில்லை என்ற சந்தேகம் அப்போது கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று ஜெய்லர் ஆடியோ லான்ச் முடிந்ததும் ஐஸ்வர்யா அப்பா ரஜினிகாந்த் உடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வதந்தியை கிளப்பிய அனைவரையும் வாயடைக்க செய்தார்.