ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட்.. கோடி கணக்கில் பண மோசடி செய்த கும்பல்: விசாரணையில் வெளிவந்த உண்மைகள்..!
Author: Vignesh18 December 2022, 2:45 pm
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராயின் பெயரில் நொய்டாவில் வெளிநாட்டை சேர்ந்த மூன்று நபர்கள் போலி பாஸ்போர்ட் தயாரித்து தற்போது போலீஸிடம் சிக்கியுள்ளனர்.
முன்னாள் ராணுவ வீரரிடம் கேன்சர் குணப்படுத்தும் மூலிகை என கூறி இந்த மூன்று நபர்களும், அவரிடம் இருந்து 1.80 கோடி ரூபாய் பண மோசடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூவரில் இரண்டு பேர் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் மற்றொருவர் கானா நாட்டை சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் மூவரும் போலி ரூபாய் நோட்டுகள் வைத்திருந்ததாகவும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
அது இந்தியா மதிப்பில் ரூபாய் 10.76 கோடி இருக்கும் என போலீசார் கூறியுள்ளனர். தற்போது இந்த மூன்று குற்றவாளியிடம் இருந்து லேப்டாப் மற்றும் சிம் கார்டு, மொபைல் போனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த மூன்று குற்றவாளிகளும் சைபர் க்ரைம் நல்ல அனுபவம் உள்ளவர்கள், அதனால் இவர்களிடம் இருந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஐஷ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட்டை எதற்காக தயாரித்தார்கள் என்பது தான் தற்போது பெரிய கேள்வியாக அனைவரிடையே எழுந்திருக்கிறது.