உடம்பு காட்டினாள் தான் நடிகைகளுக்கு பொழப்பு ஓடும் – பகீர் கிளப்பிய டாப் ஹீரோயின்!

Author: Shree
22 September 2023, 3:40 pm

மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி முதலில் மாடல் அழகியாக இருந்து பின்னர் சினிமாவில் நுழைந்தார். 2017ல் வெளியான நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா என்ற மலையாள படத்தின் மூலம் தனது நடிப்பில் அறிமுகமானார்.

தொடர்ந்து மலையாளத்தில் அடுத்தடுத்த வாய்ப்புகள் குவியத்துவங்கியது. மாயநதி , வரதன், விஜய் சூப்பரும் பௌர்ணமியும், அர்ஜென்டினா பேன்ஸ் காட்டூர்கடவு போன்ற படங்களில் நடித்திருந்தார். ஈர்த்து நடிப்பு கேரளா ரசிகர்களை தாண்டி கோலிவுட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. அதன் பின்னர் தமிழில் ஆக்சன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

தமிழில் அவரின் முதல் படம் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து மலையாளத்தில் ஹிட் ஹீரோயினாக புகழ் பெற்றார். இதனால் அவருக்கு மீண்டும் தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. பின்னர் தனுஷுன் ஜகமே தந்திரம் படத்தில் நடித்தார். கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகைகள் சினிமாவில் நிலைத்திருக்க வேண்டிய கொடுமைகள் குறித்து வெளிப்படையாக பேசினார். அதாவது இன்றைய சூழ்நிலையில் சினிமாவில் நடிகைகள் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றால் கட்டாயம் கவர்ச்சிக்கு மாறுவது அவசியமாகிவிட்டது. அப்படி அதற்கு மறுப்பு தெரிவித்தால் சினிமாவில் நீடிக்க முடியாது என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். டாப் அந்தஸ்தில் இருக்கும் நடிகையே இப்படி சொல்வதை பார்த்தால் சினிமா எதை நோக்கி செல்கிறது என்ற கேள்வி தான் எழுகிறது.

  • TTF Vasan Viral Instagram Video இளம் நடிகையுடன் உல்லாச பயணம்…ஹெல்மெட் போடாமல் சென்ற TTF வாசன்..!
  • Views: - 355

    1

    0