டக்குனு பார்த்ததும் தனுஷ்னு நெனச்சிட்டோம்… மகனுடன் ஐஸ்வர்யா வெளியிட்ட போட்டோ – ரசிகர்கள் ஷாக்!
Author: Shree4 September 2023, 5:21 pm
கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.
தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.
பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், இருவரும் இன்றுவரை சட்டபூர்வமாக விவாகரத்து செய்ய அணுகவில்லை என்று கூறப்பட்ட நிலையில், தனுஷ்சை பிரிந்த பின் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா தன் அப்பா ரஜினிகாந்த்தை வைத்து சிறப்பு தோற்றத்தில் நடித்துவரும் லால்சலாம் படத்தினை இயக்கி வரும் நிலையில், ஐஸ்வர்யா தனுசை பிரிந்து ஒரு வருடமான நிலையில், அவரவர் தங்களது கெரியரில் கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் ஐஸ்வர்யா தனது மகன் யாத்ரா உடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு “நீங்கள் உங்கள் மகனைப் பார்த்து பெருமிதம் கொள்ளும் அந்த நாட்களில் ஒன்று” என கேப்ஷன் கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இந்த லேட்டஸ்ட் போட்டோவுக்கு நெட்டிசன்ஸ் எல்லோரும் லைக்ஸ் குவித்து வருகிறார்கள். இதில் யாத்ரா மிகவும் உயரமாக வளர்ந்திருப்பதை பார்த்து டக்கனுக்கு பார்க்க தனுஷ் போலவே இருக்கிறார் என பலரும் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.