Matrimonial அக்கவுண்ட் இருக்கு.. கல்யாணத்துக்கு தடா போட்ட மணிரத்னம் பட நடிகை

Author: Hariharasudhan
21 November 2024, 5:11 pm

தனக்கு திருமணம் என்ற பந்தத்தில் நம்பிக்கை இல்லை என நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளது ரசிகர்களை சற்று கலங்கச் செய்து உள்ளது.

சென்னை: மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், கேப்டன், விஷ்ணு விஷால் உடன் கட்டா குஸ்தி ஆகிய படங்களில் நடித்தவர். ஆனால், மணிரத்னம் இயக்கத்தில் காவியப் படைப்பாக வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இந்த நிலையில், தற்போது அவர் ஹலோ மம்மி என்ற மலையாளப் படத்தில் நடித்து முடித்து உள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் ஐஸ்வர்யா லட்சுமி ஈடுபட்டு வருகிறார். அவ்வாறு, ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தனது திருமணம் குறித்து மனம் திறந்து உள்ளார்.

ஐஸ்வர்யா லட்சுமியின் திருமண ஆசை: அதில் பேசிய ஐஸ்வர்யா லட்சுமி, “எனக்கு திருமணம் என்ற விஷயத்தில் நம்பிக்கையே இல்லை. 8, 10, 25 ஆகிய வயதில் கூட திருமணம் என்பது எனக்கு கனவு போன்றே இருந்தது. அதிலும், கேரளா குருவாயூர் கோயிலில் திருமணம் செய்வதை நான் கற்பனை செய்து கொண்டு இருந்தேன்.

ஆனால், நான் வளர்ந்த பிறகு திருமணம் மீதான என்னுடைய பார்வை மாறிவிட்டது. ஏனென்றால், என்னைச் சுற்றி இருந்த திருமணம் ஆனவர்கள் பெரும்பாலும் மகிழ்ச்சியாக இல்லை. அதேநேரம், ஒரு சிலர் மட்டுமே உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

அதேபோல், எனக்கு இப்போது 34 வயது ஆகிறது. நான் பார்த்த ஒரே ஒரு குடும்பம் மட்டும் தான் மகிழ்ச்சியுடன் சேர்ந்து வாழ்கிறது. அவர்களும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் அல்ல. மற்றவர்கள் சமரசம் செய்து கொண்டு வாழ்வதையும் நான் பார்க்கிறேன்.

AISHWARYA LEKSHMI ABOUT MARRIAGE DREAM

திருமணம் என்பது எனக்கானது இல்லை என்ற புரிதலும், விழிப்புணர்வும் எனக்கு அப்போது ஏற்பட்டது. என்னுடைய அம்மாவிடம் ஒரு மேட்ரிமோனி கணக்கை (Matrimony) தொடங்குமாறு கூறி இருந்தேன். நான் மேட்ரிமோனி இணையதளத்தில் இருந்தேன், ஆனால் அதனை மக்கள் போலி கணக்கு என்று நினைத்துக் கொண்டனர்” என கலகலப்பாகப் பேசினார்.

இதையும் படிங்க: ஜி வி பிரகாஷ் உடன் இணையப்போகும் சைந்தவி…சர்ப்ரைஸ் வீடியோவால் கொண்டாடட்டத்தில் ரசிகர்கள்…!

முன்னதாக, நடிகர் அர்ஜுன் தாஸ் உடன் ஐஸ்வர்யா லட்சுமி தொடர்பில் இருப்பதாக தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகின. ஆனால், இதனை இருவருமே மறுத்தனர். மேலும், திருமணத்தின் மீது விருப்பம் இல்லை என்ற ஐஸ்வ்ரயா லட்சுமியின் வார்த்தைகளால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

  • Serial Actor Who Got Divorce from his wife விவாகரத்து கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ஷாக் கொடுத்த சீரியல் நடிகர்!
  • Views: - 209

    0

    0