கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் 1950 முதல் 1955-ஆம் ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இது மக்களை வெகுவாக கர்ந்ததால் நான்குமுறை கல்கி வார இதழிலேயே மீண்டும் தொடராக வெளிவந்தது. இதற்கு இருந்து பேராதரவை வைத்து
1954-ல் புத்தகமாக வெளியிடப்பட்டது.
தற்போது அந்த புத்தகத்தின் அடிப்படையாக திரைப்படமாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. இதில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்துள்ளார்.
மிகப்பெரும் பொருட்செலவில் உருவான இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. அதன் தொடர்ச்சியாக 2ம் பாகம் இன்று வெளியாகியுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி நிகழ்ச்சி ஒன்றில்,
”படப்பிடிப்பில் நான் டென்ஷனாகும் போதெல்லாம் ஜெயம் ரவி அதனை நகைச்சுவையாக மாற்றிவிடுவார். திரிஷாவிடம் நீங்கள் எப்படி இவ்ளோ அழகா இருக்கீங்க என்று கேட்டுக்கொண்டே இருப்பேன். இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை கொடுத்ததற்கு மணிரத்னம் சாருக்கு நன்றி என பேசிக்கொண்டிருக்கும்போதே உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கி அழுதுவிட்டார். பின்னர் விஜே அஞ்சனா , திரிஷா உள்ளிட்டோர் அவருக்கு ஆறுதல் கூறினார்கள். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.