பலே நடிகர்களுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்…. பச்சன் குடும்பத்தில் தஞ்சம் அடைந்த ஐஸ்வர்யா ராய்!

Author: Rajesh
19 December 2023, 5:37 pm

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையும் உலக சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும் பார்க்கப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி என பலரும் பட்டம் பெற்றாலும் இன்றும் ‘உலக அழகி’ என சொன்னால் முதலில் நமது நியாபகத்துக்கு வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.

குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு எவ்வளவோ நல்ல பேவரைட் ஹீரோயின்ஸ் இருந்தாலும், கனவு கன்னியாக இன்னும் மனதில் நிலைத்திருப்பவர் ஐஸ்வர்யா ராய். ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், குரு, எந்திரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரானா அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதியா பச்சன் என்ற மகளும் உள்ளார். ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு முன்னர் நடிகர் சல்மான் கான், விவேக் ஓபராய் உள்ளிட்ட நடிகர்களை காதலித்து அவர்களுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார்.

இதில் சல்மான் கானை காதலித்தபோது அவர் லவ் டார்ச்சர் நிறைய கொடுத்ததால் அவரை விட்டு விலக முடிவெடுத்துள்ளார் ஐஸ்வர்யா ராய். ஆனால், சல்மான் அவரை மிரட்டியுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் சென்று ஐஸ்வர்யா ராய்யை பலபேர் முன்பு அசிங்கப்படுத்தி மிரட்டினாராம்.

இதனால் என்ன செய்வதென்றே தெரியாத உலக அழகி பாலிவுட் சினிமாவின் படைபலம், அதிகாரம் மிக்க குடும்பமாக பச்சன் குடும்பத்திடம் தஞ்சம் அடைந்தாராம். ஆம், பாதுகாப்பிற்காக அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார். அதன் பின்னர் தான் சல்மான் கானின் தொந்தரவுகளில் இருந்து விடுபட்டு மனநிம்மதி அடைந்தாராம் ஐஸ்வர்யா ராய்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 424

    0

    0