போதும் நிறுத்துங்க….. விவாகரத்து சர்ச்சை – ஒரே அடியா முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்!

Author:
25 September 2024, 8:01 pm

இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையான ஐஸ்வர்யா ராய் 1994 ஆம் ஆண்டு உலகை அழகியாக தேர்வு செய்யப்பட்டு பின்னர் சினிமா துறையில் நடிகையாக அறிமுகமாகி இருந்தார். ஹிந்தி ,தமிழ் ,பெங்காலி மற்றும் ஆங்கில உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Aishwarya Rain-updatenews360

முதன் முதலில் மணிரத்தினம் இயக்கத்தில் இருவர் திரைப்படத்தின் மூலமாகத்தான் ஐஸ்வர்யா ராய் திரையுலகிற்கே அறிமுகமாகி இருந்தார். அதை எடுத்து தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்த ஐஸ்வர்யா ராய்க்கும் பாலிவுட் சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்க நட்சத்திர நடிகையாகவும் ஜொலித்துக் கொண்டிருந்தார்.

இவர் நடிகையாக இருக்கும் போதே பிரபல நடிகர் ஆன விவேக் ஓபராய் மற்றும் சல்மான் கான் உடன் காதலித்து அவர்களுடன் நெருக்கமாக பழகி லிவிங் லைஃப் வாழ்ந்ததாக செய்திகள் வெளியாகியது. இதனிடையே அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயை காதலிப்பதாக அடம் பிடித்து தன்னுடைய அப்பா அமிதாப் பச்சனிடம் கூறியதால் வேறு வழி இன்றி ஐஸ்வர்யா ராயை தன் மகனுக்கு மனம் முடித்து வைத்தார் அபிஷேக் பச்சன். இதையடுத்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த அவர் குடும்ப வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

aishwarya rai

இதனிடையே திடீரென ஐஸ்வர்யாராய் தன் கணவரை விவாகரத்து செய்யப் போகிறார் என செய்திகள் அடுத்தடுத்து வெளியாகியது. இதற்கான பல காரணங்கள் கூறப்பட்டு அவ்வவ்போது செய்திகள் வெளியாகி வருகிறது. இதனிடையே நடிகை ஐஸ்வர்யா ராய் தன் கையில் அணிந்திருந்த திருமணம் மோதிரத்தை கழட்டி எறிந்து விட்டார்.

இதையும் படியுங்கள்: பக்கத்து வீட்டுகாரருடன் குடுமிப்பிடி சண்டை போட்ட திரிஷா – கோர்ட் படி ஏறிய பிரச்சனை!

இதனால் விவாகரத்து உறுதி செய்யப்பட்டது என்றெல்லாம் செய்திகள் வெளியான நிலையில் தற்போது விவாகரத்து சர்ச்சைக்கு அழுத்தமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதாவது மீண்டும் தன்னுடைய கையில் தன்னுடைய திருமண மோதிரத்தை அணிந்திருக்கிறார். இதன் மூலம் அவர் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்து விட்டார் என வெளியான செய்திகளுக்கு முற்றிலுமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

  • ajith kumar team won second place belgium car race விபத்துக்கு கிடைத்த வெகுமதி- கார் ரேஸில் மீண்டும் தடம் பதித்த அஜித்குமார்! மாஸ் காட்டுறாரே!