திருமண மோதிரத்தை கழட்டி வீசிய அபிஷேக் பச்சன்…. ஐஸ்வர்யா ராய் உடன் விவாகரத்தா?

Author: Rajesh
6 December 2023, 9:59 am

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையும் உலக சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும் பார்க்கப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி என பலரும் பட்டம் பெற்றாலும் இன்றும் ‘உலக அழகி’ என சொன்னால் முதலில் நமது நியாபகத்துக்கு வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.

குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு எவ்வளவோ நல்ல பேவரைட் ஹீரோயின்ஸ் இருந்தாலும், கனவு கன்னியாக இன்னும் மனதில் நிலைத்திருப்பவர் ஐஸ்வர்யா ராய். ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், குரு, எந்திரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரானா அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதியா பச்சன் என்ற மகளும் உள்ளார். இந்நிலையில் இவர்களின் 16 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வரவுள்ளதாக அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

ஆம், எப்போதும் தனது கையில் அணிந்திருக்கும் திருமண மோதிரத்தை கழட்டாதாக அபிஷேக் பச்சன் தற்போது திடீரென திருமண மோதிரத்தை கழட்டி வீசியுள்ளார். இதையடுத்து ஐஸ்வர்யா ராய் உடன் அவருக்கு ஏதேனும் மனக்கசப்பா? விரைவில் இவர்கள் விவாகரத்து செய்யப்போகிறார்களா? என்றெல்லாம் சமூகவலைத்தளத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!