சைக்கோ டார்ச்சர்…. முன்னாள் காதலனை கழட்டிவிட அபிஷேக் பச்சனை கையில் போட்ட ஐஸ்வர்யா ராய்!

Author: Shree
22 April 2023, 10:03 pm

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையும் உலக சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும் பார்க்கப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி என பலரும் பட்டம் பெற்றாலும் இன்றும் ‘உலக அழகி’ என சொன்னால் முதலில் நமது நியாபகத்துக்கு வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.

குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு எவ்வளவோ நல்ல பேவரைட் ஹீரோயின்ஸ் இருந்தாலும், கனவு கன்னியாக இன்னும் மனதில் நிலைத்திருப்பவர் ஐஸ்வர்யா ராய். ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், குரு, எந்திரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரானா அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதியா பச்சன் என்ற மகளும் உள்ளார். அபிஷேக் பச்சனை திருமணம் செய்வதற்கு முன்னர் ஐஸ்வர்யா ராய் சல்மான் கானை காதலித்து சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.

ஆனால், நாளுக்கு நாள் அவரது கொடுமையும் , தொந்தரவும் அதிகரித்துள்ளது. இதனால் அவரை கழட்டிவிட்டுள்ளார். ஆனால் சல்மான் கான் ஐஸ்வர்யா ராய் நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று அட்டூழியம் செய்திருக்கிறார். அவரின் அராஜகம் அதிகமாக அபிஷேக் பச்சனுடன் நெருங்கி பழகி அவருக்கு இருந்த செல்வாக்கை வைத்து சல்மான் கானை அடக்கிவைத்துவிட்டாராம். அதன் பின்னர் அபிஷேக் பச்சனை அவசர அவசரமாக திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த பழைய சம்பவம் தற்போது மீண்டும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்