ஐஸ்வர்யா ராய் நீங்க அப்படி ஓரமா போங்க… ஹிட் பட வாய்ப்பை தட்டி பறித்த ஜோதிகா!

Author: Shree
16 June 2023, 8:20 pm

ஹிந்தி திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கிய ஜோதிகா, வாலி திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, பூவெல்லாம் கேட்டுப்பார், குஷி, முகவரி என டாப் ஹீரோக்களுடன் தொடர் வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக மாறினார். விஜய், அஜித், கமல்ஹாசன், ரஜினி என டாப் ஹீரோக்கள் ஜோடியாக நடித்து கனவு தேவதையாக மாறினார்.

சந்திரமுகி படத்தில் ஜோதிகாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதனிடையே, நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலம் முதல் சில திரைப்படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் காதல் கொண்ட நடிகர் சூர்யாவுடன் காதலில் விழுந்தார். பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர், சில்லுனு ஒரு காதல் போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்தனர்.

இருவீட்டாரின் சம்மதம் பெற்று திருமணம் செய்த இந்த நட்சத்திர தம்பதிக்கு தேவ் மற்றும் தியா என்ற குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு, படங்களில் நடிக்காமல் இருந்து வந்த பல வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த 2015ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு, ராட்சசி, தம்பி, உடன்பிறப்பே போன்ற படங்களில் பெரும்பாலும் குடும்ப பாங்கான ரோல் மட்டும் ஏற்று நடித்தார் ஜோதிகா. தொடர்ந்து தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையயில் ஜோதிகா நடித்த சந்திரமுகி படத்தில் ஆரம்பத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் தான் கமிட் ஆனாராம். ஏனோ சில காரணங்களால் அவர் நடிக்காமல் போக பின்னர் ஜோதிகா அதற்கு சரியாக இருப்பார் பார்ப்போம் என சந்தேகத்தோடு ஒப்பந்தம் செய்தார்களாம். பின்னர் ஜோதிகா நடிப்பில் மிரட்டி எடுத்துவிட்டார். படமும் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இதில் சந்திரமுகியாக ஜோதிகா நடித்திருப்பார். இந்த கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்கவிருந்தது நடிகை ஐஸ்வர்யா ராய் தானாம். ஆனால் சில காரணத்தால் அவரால் நடிக்க முடியவில்லையாம்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 588

    0

    0