Honeymoon -ல் தான் திருமணமானதையே உணர்ந்தேன்.. ஐஸ்வர்யா ராய் பளீச்..!

Author: Vignesh
20 April 2024, 5:46 pm

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையும் உலக சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும் பார்க்கப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி என பலரும் பட்டம் பெற்றாலும் இன்றும் ‘உலக அழகி’ என சொன்னால் முதலில் நமது நியாபகத்துக்கு வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.

மேலும் படிக்க: பல பேருடன் தொடர்பு.. அதிக பண தேவை இருந்துச்சு; எமோஷனலாக பேசிய ரேஷ்மா பசுப்புலேட்டி..!

குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு எவ்வளவோ நல்ல பேவரைட் ஹீரோயின்ஸ் இருந்தாலும், கனவு கன்னியாக இன்னும் மனதில் நிலைத்திருப்பவர் ஐஸ்வர்யா ராய். ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், குரு, எந்திரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Aishwarya Rain-updatenews360

இவர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரானா அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதியா பச்சன் என்ற மகளும் உள்ளார்.

மேலும் படிக்க: ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க.. ப்ளூ சட்டையால் நொந்து போன விஜய் ஆண்டனியின் பதிவு..!

இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் அளித்த பழைய பேட்டி ஒன்று சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது. அதில், அவர் கூறுகையில் போராவுக்கு விமானத்தில் சென்றோம். அப்போது, விமான பணிப்பெண் ஒருவர் என்னை பார்த்ததும் திருமதி பச்சன் என சொன்னார். அந்த சமயத்தில், ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம். எனக்கு திருமணம் ஆனதையே அப்போதுதான் உணர்ந்தேன். நான் திருமதி பச்சன் ஆகிவிட்டதையும் அப்போதுதான் ஞாபகம் வந்தது என்று ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ