சிவகார்த்திகேயன் கிட்ட கூச்சமே படாமல் கேட்டுட்டேன்.. ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்..!

Author: Vignesh
30 October 2023, 11:26 am

கடந்த சில நாட்களாக சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமானின் சண்டை தான் சினிமாவின் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. பிரபல இசையமைப்பாளர் டி. இமான் சமீபத்திய பேட்டி ஒன்றில், ” சிவகார்த்திகேயன் தன்னை ஏமாற்றிவிட்டதாக. அவர் மிகப்பெரிய துரோகி என்றும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர், “சிவகார்த்திகேயன் கடின உழைப்பாளி என்பதற்கு மாற்று கருத்தே இல்லை. மனம் கொத்தி பறவை படத்தில் ஆரம்பித்த அவருடனான பயணம் பல படங்களில் தொடர்ந்தது. ஆனால் அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்.

d-imman-1-1

அவரை நான் மன்னிக்கவே மாட்டேன். மேலும், இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்று தடாலடியாக கூறினார். இவ்வளவு வெறுப்புக்கு என்ன காரணம் என கேட்டதற்கு… சம்பவத்தை வெளியில் சொல்ல முடியாது. பார்ப்பதற்கு தான் அவர் நல்ல மனிதர் என்னிடம் அன்பாக பேசிக்கொண்டே எனக்கு எதிரான வேலைகள் செய்துவந்ததை நான் தாமதமாக தான் புரிந்துக்கொண்டேன் என தெரிவித்திருந்தார். இச்சம்பவத்தை அடுத்து இருவர் மீதும் சந்தேகித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Aishwarya-Rajesh - updatenews360

இந்நிலையில், சிவகார்த்திகேயன் வீக்கனஸ் விஷயங்களை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதில் நாங்கள் ஒருமுறை படப்பிடிப்பிற்காக குற்றாலத்திற்கு சென்று இருந்தோம். அங்கு அனைவரும் டீ காபி குடித்துக் கொண்டிருந்தோம்.

sivakarthikeyan-updatenews360

ஆனால் சிவகார்த்திகேயன் டீ காபி குடிக்கவில்லை அவரிடம் ஏன் குடிக்கவில்லை என்று கேட்டேன். அதற்கு அவர் நான் அதெல்லாம் குடிக்க மாட்டேன் என்று பதில் அளித்தார். ஒரு நடிகனாக போதை பழக்கம் கிடையாது, புகைப்படக்கம் கிடையாது. ஆனால், அதிகமாக இனிப்பு மட்டும் சாப்பிடுவார் அதை பார்த்திருக்கிறேன் என்று ஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 687

    8

    7