தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.
அட்டகத்தி திரைப்படம் தான் இவரை பிரபலமாக்கியது. அதன் பின்னர் வடசென்னை, காக்கா முட்டை, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் , தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது கெரியருக்கு மைல் கல்லாக அமைந்தது. சில நாட்களுக்கு முன்னர் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து சொப்பன சுந்தரி திரைப்படம் வெளியாகி தோல்வி அடைந்தது. பின்னர் ஃபர்ஹானா என்ற படத்தில் நடித்து இஸ்லாமிய மக்களின் வெறுப்புக்கு ஆளாகினார்.
தொடர்ந்து கிடைக்கும் படவாய்ப்புகளில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் கடைதிறப்பு விழா ஒன்றில் கலந்துக்கொண்டார். அப்போது பத்திரிக்கையாளர்கள் அவரிடம், விஜயகாந்த் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த வராதது குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், நான் பாண்டிச்சேரியில் சுழல் 2 பட ஷூட்டிங்கில் இருந்ததால் விஜய்காந்த் மறைவிற்கு என்னால் வரமுடியவில்லை என்றார்.
பின்னர் நடிகர் சங்க கட்டிடத்திற்கு அவரது பெயரை வைப்பது குறித்து கேள்வி கேட்டதற்கு, நான் இப்போது கடை திறப்பு விழாவிற்கு வந்திருக்கிறேன். இந்த இடத்தில் மறந்த நடிகர் விஜயகாந்த் பற்றி கேட்பது நல்லதல்ல. எனவே கடைதிறப்பு விழாவை பற்றி மட்டும் கேளுங்கள் என்று கையெடுத்து கும்பிட்டு கேள்விகளுக்கு முடிவுகட்டினார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.