அப்படி பண்ணதை Public-ல சொல்லிட்டு இருக்க முடியுமா? கடுப்பான ஐஸ்வர்யா ராஜேஷ்..!

Author: Vignesh
5 January 2024, 4:59 pm

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.

aishwarya rajesh - update news 360

அட்டகத்தி திரைப்படம் தான் இவரை பிரபலமாக்கியது. அதன் பின்னர் வடசென்னை, காக்கா முட்டை, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் , தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது கெரியருக்கு மைல் கல்லாக அமைந்தது. சில நாட்களுக்கு முன்னர் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து சொப்பன சுந்தரி திரைப்படம் வெளியாகி தோல்வி அடைந்தது. பின்னர் ஃபர்ஹானா என்ற படத்தில் நடித்து இஸ்லாமிய மக்களின் வெறுப்புக்கு ஆளாகினார்.

aishwarya rajesh - updatenews360

தொடர்ந்து கிடைக்கும் படவாய்ப்புகளில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் கடைதிறப்பு விழா ஒன்றில் கலந்துக்கொண்டார். அப்போது பத்திரிக்கையாளர்கள் அவரிடம், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகை, நடிகர்கள் உதவி செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில், அளித்த ஐஸ்வர்யா ராஜேஷ் செய்த உதவிகளை வெளியே சொல்லணும்னு தேவையில்லை. பப்ளிக்ல இதையெல்லாம் சொல்லிட்டு இருப்பாங்க, உதவி செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் உடனே, நீங்க என்ன உதவி செய்தீர்கள் என்று கேட்க வேண்டாம் என காட்டமாக பதில் அளித்தார்.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?