அழகான முகத்தோற்றம், இனிமையான பேச்சு, குழந்தை போன்ற சுபாவம் கொண்டு சினிமாவில் நுழைந்த ராஷ்மிகா மந்தனா இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்திவிட்டார். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார்.
தமிழில் கார்த்தியின் சுல்தான் படம் மூலம் அறிமுகமான இவர் அதன் பின் விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்தார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். இதனிடையே அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா படத்தில் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். இந்நிலையில் பிரபல தமிழ் நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் புஷ்பா படத்தில் ராஷ்மிகாவின் ரோல் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி சர்ச்சையில் சிக்கினார்.
அதாவது, புஷ்பா பட வாய்ப்பு மட்டும் எனக்கு வந்திருந்தால் நான் உடனே ஓகே சொல்லியிருப்பேன். அந்த படத்தில் இடம் பெற்ற ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தில் நான் ராஷ்மிகாவை விட சிறப்பாக நடித்திருப்பேன் என கூறி அவரின் நடிப்பை கொச்சைப்படுத்தி பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி ராஷ்மிகாவின் ரசிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷை திட்டி தீர்த்தனர்.
தற்போது இது குறித்து தெளிவான விளக்கத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், “
“அன்பிற்குரிய நண்பர்களே…
நான் திரைத்துறைக்கு வந்ததிலிருந்து நீங்கள் என் மீது பொழிந்து வரும் நிபந்தனையற்ற அன்புக்கும், எனது அனைத்து படங்களுக்கும் நீங்கள் அளித்து வரும் பேராதவிற்கும், முதலில் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என் மீதும், என் பணியின் மீதும் அன்பைத் தவிர வேறு எதுவும் செலுத்த தெரியாத அற்புதமான ரசிகர்களையும், அழகான பார்வையாளர்களையும் பெற்றிருப்பதை நான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.
அண்மையில் ஒரு நேர்காணலின்போது என்னிடம், தெலுங்கு திரையுலகில் நான் எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன்? என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கையில், எனக்கு தெலுங்கு திரையுலகம் மிகவும் பிடிக்கும். எனக்கு விருப்பமான கதாப்பாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயமாக தெலுங்கு படங்களில் நடிப்பேன், உதாரணத்திற்கு புஷ்பாவில் வரும் ஸ்ரீ வள்ளி கதாப்பாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் என பதிலளித்தேன்.
இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது, புஷ்பா படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒரு போதும் குறை கூறவில்லை. இதனால் ஏற்பட்ட குழப்பத்தை நீக்குவதற்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன். ராஷ்மிகா மந்தனாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த அபிமானம் மட்டுமே உண்டு என்பதையும், திரையுலகைச் சார்ந்த சக நடிகர் நடிகைகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் உதாரணமாக கூறிய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். புரிதலுக்கு நன்றி மிகுந்த அன்புடன், ஐஸ்வர்யா ராஜேஷ்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
சென்னையில், ரவுடிசத்தில் ஈடுபட்டு வந்த கணவரால் விரக்தி அடைந்த பெண் தலைமைக் காவலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை: சென்னை…
தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் அரசு நடுநிலைப்ப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு…
புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து எதிர்கட்சித் தலைவர் திமுக சிவா உள்பட திமுகவினர் வெளியேற்றப்பட்ட பின்னணி குறித்து பார்க்கலாம். புதுச்சேரி: புதுச்சேரி…
ஆபாச நடிகையை பின்பற்றிய விவகாரம்–விளக்கம் கொடுப்பாரா? மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் பந்துவீச்சாளரான விக்னேஷ் புத்தூர்,2025 ஐபிஎல் தொடரில் சென்னை…
விஜய் நடிக்கும் கடைசி படம் ஜனநாயகன். ஹெச் வினோத் இயக்கத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நரேன்,…
This website uses cookies.