ஜாலி பண்ணலாம்னு கூப்பிட்டு போயி வச்சி செஞ்ச இயக்குனர் – ஐஸ்வர்யா ராஜேஷ் பரபரப்பு புகார்!

Author: Shree
12 April 2023, 3:05 pm

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.

அட்டகத்தி திரைப்படம் தான் இவரை பிரபலமாக்கியது. அதன் பின்னர் வடசென்னை, காக்கா முட்டை, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் , தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது கெரியருக்கு மைல் கல்லாக அமைந்தது. கடைசியா இவரது நடிப்பில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

aishwarya rajesh - update news 360

அதையடுத்து தற்போது சொப்பன சுந்தரி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‘லாக்-அப்’ புகழ் இயக்குனர் சார்லஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் லட்சுமிப்ரியா சந்திரமௌலி மற்றும் தீபா ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளார். கார் ஒன்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் கலகலப்பான காமெடி திரைப்படமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துக்கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், “ஒரு நாள் இயக்குனர் எல்லோரையும் ஒரு இடத்திற்கு அழைத்து… இன்னைக்கு ஒரு சூப்பரான இடத்திற்கு போறோம் ஜாலி பண்றோம் என கூறினார். நாங்களும் அதை நம்பி பெருசா எதிர் பார்த்து சென்றோம். ஆனால், கடைசியில் உச்சி வெயில் மண்டையில் சுள்ளுனு ஏறுது அங்க ஷூட்டிங் வச்சி படுத்திட்டாரு மனுஷன். ஆனால், எனக்கு அது பெரிசா தெரியல, கா.பெ ரணசிங்கம், எங்க வீட்டு பிள்ளை படத்தில் அடிக்குற வெயிலில் காலில் செருப்பு கூட போடாமல் நடிச்சிருக்கேன். அதெல்லாம் பார்க்கும்போது இது எவ்வளவோ பரவாயில்லை என்றார்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 710

    7

    7