தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.
அட்டகத்தி திரைப்படம் தான் இவரை பிரபலமாக்கியது. அதன் பின்னர் வடசென்னை, காக்கா முட்டை, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் , தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது கெரியருக்கு மைல் கல்லாக அமைந்தது. சில நாட்களுக்கு முன்னர் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து கடைசியாக சொப்பன சுந்தரி திரைப்படம் வெளியாகியது.
இந்நிலையில் தற்போது சோலோ ஹீரோயினாக ஃபர்ஹானா முசுலீம் பெண்ணாக நடித்திருக்கிறார். காக்கா முட்டை படத்திற்கு பிறகு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கும் இப்படத்தை இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இவர் ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் போன்ற படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யா ராஜேஷை சுற்றி நடக்கும் கதையாக மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். மேலும் இயக்குநர் செல்வராகவன், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். வரும் மே மாதம் 12 ஆம் தேதி ரிலீசாகும் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரிக்க செய்துள்ளது.
தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என்று நடிகை நயன்தாரா அஜித் குமார் பாணியில் அறிவித்துள்ளார். சென்னை:…
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
This website uses cookies.