இஸ்லாமியத்தை இழிவுபடுத்திய ஐஸ்வர்யா ராஜேஷ் – இந்திய தேசிய லீக் புகார்!
Author: Shree26 April 2023, 9:33 pm
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.
அட்டகத்தி திரைப்படம் தான் இவரை பிரபலமாக்கியது. அதன் பின்னர் வடசென்னை, காக்கா முட்டை, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் , தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது கெரியருக்கு மைல் கல்லாக அமைந்தது. சில நாட்களுக்கு முன்னர் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து கடைசியாக சொப்பன சுந்தரி திரைப்படம் வெளியாகியது.
இந்நிலையில் தற்போது சோலோ ஹீரோயினாக ஃபர்ஹானா முசுலீம் பெண்ணாக நடித்திருக்கிறார். இப்படத்தை இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியானது. அதில் முஸ்லீம் கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் வகையில் கொச்சையான காட்சிகளில் நடித்தது மட்டும் இல்லாம ஆபாச காட்சிகளில் நடித்து இஸ்லாமிய பெண்களை இழிவுபடுத்தியுள்ளதாக இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் தடா அப்துல் ரஹீம் என்பவர் புகார் அளித்துள்ளார்.
அதில் ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபர்ஹானா திரைப்படத்தின் டீசர் காட்சியில் ஒரு இஸ்லாமிய பெண் புர்கா அணிந்து உலகம் முழுவதும் சுற்றி வியாபாரம் செய்கிறார். இஸ்லாமிய பண்பாடு கலாச்சத்திற்கு எதிராக செய்கிறார். இதனால் இந்த படத்தை தடை செய்ய வேண்டும். மேலும் இத்திரைப்படத்தின் இயக்குனரை கைது செய்ய வேண்டும் என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.