அவரு செம ஸ்மார்ட்.. அமைச்சருக்கு ஐஸ் வைத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..!

Author: Vignesh
24 January 2024, 1:05 pm

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.

aishwarya rajesh - updatenews360

அட்டகத்தி திரைப்படம் தான் இவரை பிரபலமாக்கியது. அதன் பின்னர் வடசென்னை, காக்கா முட்டை, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் , தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது கெரியருக்கு மைல் கல்லாக அமைந்தது. சில நாட்களுக்கு முன்னர் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து சொப்பன சுந்தரி திரைப்படம் வெளியாகி தோல்வி அடைந்தது. கடைசியாக ஃபர்ஹானா என்ற படத்தில் நடித்து இஸ்லாமிய மக்களின் வெறுப்புக்கு ஆளாகினார்.

aishwarya-rajesh

தற்போது, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். ஆனால், சமீப காலமாக அவர் நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனை தொடர்ந்து, ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது இலங்கைக்கு சென்று இருக்கிறார்.

aishwarya rajesh - updatenews360

இலங்கையில், நுவ்ரெலியா நகரில் இருக்கும் ஹட்டன் டன்பார் மைதானத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். அவருடன் நடிகை சம்யுக்தா ஷால், ஐஸ்வர்யா தாத்தா, மீனாட்சி கோவிந்தராஜன், உள்ளிட்ட அவர்களும் சிறப்பு விருந்தினராக சென்றுள்ளனர்.

aishwarya rajesh - updatenews360

நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டத்தில் ஒருவரை பிடித்திருக்கிறது. அவரை சென்னை அழைத்து போய்விடவா? மஞ்சள் நிற ஆடை போட்டு ஆட்டம் போட்டவர் யார் சாமி நீ என்று கூறியிருக்கிறார்.

மேலும், அமைச்சர் கூப்பிட்டு இருக்கிறார் என்று சொன்னார்கள் நானும் ஜீவன் தொண்டைமான் வயசானவர் என்று நினைத்தேன். இந்த மனுஷன் என்னைய இந்த மனுஷனை பார்த்தா குட்டியா ஸ்மார்ட்டா செம அழகா இருக்காரு, ஆனால், இந்த மாதிரி ஒரு மினிஸ்டர் கிடைக்க நாம கொடுத்து வைத்திருக்க வேண்டும். உலகிலேயே இளமையான அமைச்சர் இவர்தான்.

aishwarya rajesh - updatenews360

காக்கா முட்டை படத்தில் நடிச்சேன் பத்துக்கு பத்து வீட்டில் நடிச்ச போது ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. ஆனால், இங்கே இருக்கும் மக்கள் எட்டுக்கு எட்டு வீட்டில் வசிக்கிறார்கள். இந்த மாதிரி மினிஸ்டர் எங்கள் ஊரில் இல்லையே என்று கூறி இருக்கிறார்.

aishwarya rajesh - updatenews360

இங்கே இருக்கும் பெரியவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் 18 வயதில் கல்யாணம் பண்ணிக்கணும் குழந்தை பெத்துக்கணும் வீட்டை பார்த்துக் கொள்ளும் எனக்கு திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ளும் என்று ஆசை இருக்கிறது என்று ஐஸ்வர்யா ராஜேஷ் ஓப்பனாக தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது, இணையதளத்தில் பரவி ஐஸ்வர்யா ராஜேஷ் பலர் கிண்டல் செய்தும் வருகிறார்கள்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 464

    0

    0