தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.
அட்டகத்தி திரைப்படம் தான் இவரை பிரபலமாக்கியது. அதன் பின்னர் வடசென்னை, காக்கா முட்டை, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் , தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது கெரியருக்கு மைல் கல்லாக அமைந்தது. சில நாட்களுக்கு முன்னர் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து சொப்பன சுந்தரி திரைப்படம் வெளியாகி தோல்வி அடைந்தது. கடைசியாக ஃபர்ஹானா என்ற படத்தில் நடித்து இஸ்லாமிய மக்களின் வெறுப்புக்கு ஆளாகினார்.
இந்நிலையில் பேட்டி ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றி பேசிய கலா மாஸ்டர் தனக்கு கொடுமையான துயரங்களை பற்றி பேசியுள்ளார்.அதாவது ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சிலர், நடன மாஸ்டர் ஆனார்கள். சிலர் சீரியல்களில் நடித்து வருகின்றனர். ஆனால், ஐஸ்வர்யா ராஜேஷ் அவளது கனவை எட்டி பிடிக்கும் சமயத்தில் கொடுமையான துயரத்தை அனுபவித்தார்.
ஆம், அவர் மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த பெண். ஐஸ்வர்யாவின் தாயும் தந்தையும் நடனக் கலைஞர்கள், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நான்கு உடன்பிறப்புகள், இதில் மூத்த மகன் 12 வயதிலேயே தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். அதன் பின் இரண்டாவது மகன் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தார். இந்த இரண்டு மரணமும் ஐஸ்வர்யாவின் குடும்பத்தை பெரிதும் பாதித்தது. சகோதரர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததால் மானாட மயிலாட நிகழ்ச்சியை விட்டு ஐஸ்வர்யா வெளியேறினார். ஆனால் அதன் பின்னர் மீண்டும் அடுத்த சீசனில் கலந்து கொண்டு வெற்றியாளரானார். தனது கனவை அடையவேண்டும் என வெறிகொண்டு உழைத்து இந்த இடத்திற்கு வந்துள்ளார் என்று கலா மாஸ்டர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.