டஸ்கி அழகியாக சினிமா பார்முலாவையே மாற்றிய ஐஸ்வர்யா ராஜேஷ் – சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

Author: Rajesh
10 January 2024, 10:42 am

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.

aishwarya-rajesh

அட்டகத்தி திரைப்படம் தான் இவரை பிரபலமாக்கியது. அதன் பின்னர் வடசென்னை, காக்கா முட்டை, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் , தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது கெரியருக்கு மைல் கல்லாக அமைந்தது. சில நாட்களுக்கு முன்னர் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து சொப்பன சுந்தரி திரைப்படம் வெளியாகி தோல்வி அடைந்தது. கடைசியாக ஃபர்ஹானா என்ற படத்தில் நடித்து இஸ்லாமிய மக்களின் வெறுப்புக்கு ஆளாகினார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருமுன் ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று தனது 34 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி எல்லோரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.

ஆம், ஒரு படத்திற்கு ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் விளம்பர படங்களின் மூலம் மாதம் ரூ. 2 லட்சம் வரை வருமானம் எடுக்கிறார். அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 11 கோடி என்று கூறப்படுகிறது. சொந்தமாக பங்களா வீடு , சொகுசு கார்கள் என ராணி போன்று தனது சொந்த காலில் நிற்கிறார். டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு சினிமாவிற்கான பார்முலாவையே மாற்றி எழுதிய ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!