தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.
அட்டகத்தி திரைப்படம் தான் இவரை பிரபலமாக்கியது. அதன் பின்னர் வடசென்னை, காக்கா முட்டை, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் , தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது கெரியருக்கு மைல் கல்லாக அமைந்தது. சில நாட்களுக்கு முன்னர் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து சொப்பன சுந்தரி திரைப்படம் வெளியாகி தோல்வி அடைந்தது. கடைசியாக ஃபர்ஹானா என்ற படத்தில் நடித்து இஸ்லாமிய மக்களின் வெறுப்புக்கு ஆளாகினார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் கவர்ச்சியாக நடிப்பது குறித்து பேசி உள்ளார். அதில், அவர் கவர்ச்சியாக நடிக்க எனக்கு நிறைய அழைப்புகள் வந்தன. இருப்பினும், நான் அந்த கதைகளை தேர்வு செய்யவில்லை. அதற்கு காரணம் என்னை பொறுத்த வரைக்கும் பொருத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கவே விரும்புகிறேன். எதையும் காட்டாமல் கவர்ச்சி காட்டாமல் கூட நடிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். எனக்கு அந்த விஷயம் தேவையா என்ற சந்தேகம் எழும்பும், ஒன்றை நான் செய்ய விரும்பவில்லை. என்னுடைய படங்கள் சமூக பொறுப்புடன் இருக்க வேண்டும் குடும்பங்களை மகிழ்விக்க வேண்டும் என்பதை என்னுடைய நோக்கம் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…
பாலிவுட் நடிகை ஷாக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து…
விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,…
நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தர்ஷினியின் மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு என எடப்பாடி பழனிசாமி…
சென்னையில், இன்று (மார்ச் 29) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 360…
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
This website uses cookies.