அது நடக்கலைன்னா கூட பரவாயில்ல… ஆனால் திருமணம் வேண்டாம் – அறவே வெறுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!
Author: Shree19 September 2023, 8:15 pm
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.
அட்டகத்தி திரைப்படம் தான் இவரை பிரபலமாக்கியது. அதன் பின்னர் வடசென்னை, காக்கா முட்டை, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் , தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது கெரியருக்கு மைல் கல்லாக அமைந்தது. சில நாட்களுக்கு முன்னர் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து சொப்பன சுந்தரி திரைப்படம் வெளியாகி தோல்வி அடைந்தது. கடைசியாக ஃபர்ஹானா என்ற படத்தில் நடித்து இஸ்லாமிய மக்களின் வெறுப்புக்கு ஆளாகினார்.
தொடர்ந்து கிடைக்கும் படவாய்ப்புகளில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணம் எப்போது நடக்கும் என்ற கேள்விக்கு ” எப்போ வேணாலும் நடக்கும். அது நடக்கவேண்டும் என இருந்தால் நிச்சயம் நடக்கும். ஒரு வேலை திருமணமே நடக்கவில்லை என்றால் கூட எனக்கு கவலை இல்லை. சினிமா தான் எனக்கு உயிர் மூச்சு எல்லாமே. எனவே சினிமாவை நேசிக்கக்கூடிய தன்மை உள்ள ஒருவரை சந்திக்கும் வரை என் திருமணம் பற்றி யோசனை கூட எனக்கு கிடையாது என்று தெளிவாக கூறியுள்ளார்.