அந்த இடத்தில் கை வைத்த நபர்.. கசப்பான அனுபவம் குறித்து மனம் திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!
Author: Vignesh28 August 2023, 4:45 pm
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.
அட்டகத்தி திரைப்படம் தான் இவரை பிரபலமாக்கியது. அதன் பின்னர் வடசென்னை, காக்கா முட்டை, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் , தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது கெரியருக்கு மைல் கல்லாக அமைந்தது. சில நாட்களுக்கு முன்னர் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து சொப்பன சுந்தரி திரைப்படம் வெளியாகி தோல்வி அடைந்தது. கடைசியாக ஃபர்ஹானா என்ற படத்தில் நடித்து இஸ்லாமிய மக்களின் வெறுப்புக்கு ஆளாகினார்.
இந்நிலையில் சமீப நாட்களாக தொடர்ந்து வெளிநாடுகளுக்கு தனது தோழிகளுடன் ட்ரிப் அடித்து என்ஜாய் பண்ணும் போட்டோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் தான் கல்லூரியில் படிக்கும்போது தன்னுடைய ஃபிரண்ட் வீட்டுக்கு ஷேர் ஆட்டோவில் சென்று வீடு திரும்பி கொண்டிருந்தபோது ஆட்டோவில் இருந்த நபர் நெருங்கி வந்து தன் தொடையின் மீது கை வைத்ததாகவும், அப்போது ஆட்டோவை நிறுத்த சொல்லி அந்த நபருக்கு நடு ரோட்டிலே, கடை வைத்து விட்டதாகவும், மேலும் இந்த மாதிரியான கஸ்டமர்களை ஏன் ஆட்டோவில் ஏற்றுகிறீர்கள் என்று ஆட்டோ டிரைவரிடம் கேட்டபோது அந்த நபரை திட்டி வண்டியிலிருந்து இறக்கி விட்டு விட்டனர் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.