எந்த ஹீரோவும் என்னை ஏத்துக்கல.. விரக்தியில் ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்த முடிவு..!
Author: Vignesh8 July 2023, 10:30 am
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.
அட்டகத்தி திரைப்படம் தான் இவரை பிரபலமாக்கியது. அதன் பின்னர் வடசென்னை, காக்கா முட்டை, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் , தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது கெரியருக்கு மைல் கல்லாக அமைந்தது.
விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஒரு சில ஹீரோக்கள் மட்டுமே தனக்கு வாய்ப்பு கொடுத்ததாகவும், மற்ற நடிகர்களின் படங்களில் தனக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்றும், காக்கா முட்டை படம் வந்தபோது பலரும் பாராட்டினார்கள் எனவும், ஆனால் ஒன்றை வருடம் தான் வாய்ப்பு இல்லாமல் இருந்ததாகவும், அதனால் விரக்தியின் உச்சத்திற்கே சென்றதாகவும், அதன்பின் தான் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படியான படங்களில் நடிக்க தொடங்கி தற்போது வரை 15 படங்களில் நடித்து விட்டதாகவும், என்றாலும் தற்போது வரை எந்த ஹீரோவும் தனக்கு வாய்ப்பு தர முன்பு வரவில்லை என்று ஐஸ்வர்யா ராஜேஷ் வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார்.