இனிமேல் என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது… மகள் எடுத்த அதிரடி முடிவு : ஷாக்கில் ரஜினி!!

Author: Vignesh
23 February 2023, 10:37 am

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.

Rajini Shankar - Updatenews360

70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை தொடர்ந்து, மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் ரஜினி நடிக்கவுள்ளார்.

lal-salaam - updatenews360

இந்நிலையில் தனது மூத்த மகளால் அப்செட்டில் இருக்கிறாராம் நடிகர் ரஜினிகாந்த். 2006ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்த ஐஸ்வர்யாவுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர், ஐஸ்வர்யா மூன்று படங்களை இயக்கினார். இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்தார்.

இவர்களுடைய பிரிவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இவர்களுடைய பிரிவுக்கு பின் அவரவர் வேளைகளில் இருவரும் பிசியாகிவிட்டனர். ஆம், தனுஷ் தன்னுடைய படங்களில் கவனம் செலுத்த துவங்கிவிட்டார்.

இதனிடையே, ஐஸ்வர்யாவும் இயக்கம், ஒர்கவுட் என தொடர்ந்து பல விஷயங்களில் பிசியாக ஈடுபட்டு வருகிறார். அதே போல் தான் சைக்கிளிங் கூட செய்து வருகிறார்.

அந்தவகையில், தற்போது தனிமையில் சைக்கிளிங் செல்லும் புகைப்படம் ஒன்றை தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதில் Me..myself and I … என பதிவு செய்துள்ளார்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!