அந்த உணர்ச்சி இல்லைன்னா.. அவசியம் இல்ல.. விவாகரத்துக்கு பின் போட்டு தாக்கிய ஐஸ்வர்யா..!

Author: Vignesh
19 April 2024, 7:09 pm

கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய பிரிவை அறிவித்தனர். திடீரென இருவரும் தங்களுடைய பிரிவை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இவர்களுடைய பிரிவிக்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், சமரசம் செய்து வைக்க ரஜினிகாந்த் முயற்சித்து பின்னர் அது தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்பட்டது.

dhanush - updatenews360

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

முன்னதாக, 2004 ஆம் ஆண்டு நடந்த தங்களுடைய திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று இருவரும் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த விஷயம் அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில், ரஜினிகாந்த மகள் ஐஸ்வர்யா சமீபத்தில் இணையதளத்தில் பகிர்ந்த ஒரு பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது, இன்ஸ்டாகிராம் பதிவில் ஐஸ்வர்யா வாழ்க்கையில் சில விஷயங்களை பார்க்கும் போது நமக்கு பிடித்தவாறு இருக்கும். அந்த விஷயம் நமக்கு கிடைத்த பின்னர் நம்மிடம் வந்து சேர்ந்த பின்னர் எப்போது அது நமக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று நினைப்போம்.

dhanush-aishwarya

மேலும் படிக்க: கீழே விழ பதறிய திரிஷா.. ஸ்டைலாக வந்து நடிகையுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்..!

ஆனால், அப்படி நினைக்கும் அந்த எதிர்பார்ப்பு பல நேரங்களில் பொய்யாகிவிடும் என்றும், அதனால் அந்த விஷயத்தில் நம்முடைய எதிர்பார்ப்பை மாற்றிக் கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார். மேலும், நாம் விரும்பும் அன்பு சில மனிதர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று ஒரு சூரியனைப் போல் அவர் வாழ்க்கையில் வெளிச்சத்தை கொண்டுவர நினைப்போம். ஆனால், அந்த நேரம் வெளிச்சத்துக்கு இடையூறாக மழை வந்து விட்டால், நாம் காட்டிய அன்பை வெறுத்து விடுவார்கள்.

மழை வந்தாலும், நம்மை வெறுத்தாலும் அவர்கள் மீது நாம் அன்பை குறைத்துக் கொள்ளக் கூடாது என்று தனது கருத்தை பதிவாக பகிர்ந்து இருந்தார். சட்டரீதியாக விவாகரத்துக்கு சென்ற சில நாட்களில் ஐஸ்வர்யா இந்த பதிவினை எதற்காக போட்டிருக்கிறார். அதுவும், என் மேல் அந்த காதல் உணர்ச்சி இல்லை என்றால் கெஞ்ச வேண்டிய அவசியம் எனக்கில்லை என்ற மறைமுக கருத்து வாயிலாக ஐஸ்வர்யா என்ன சொல்ல வருகிறார் என்று பலரும் இணையதளத்தில் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 307

    0

    0