கட்டுன புருஷன் ஆச்சே எப்படி மறக்க முடியும்.. தனுஷின் நினைவுகளை மறக்காமல் இருக்கும் ஐஸ்வர்யா..!

Author: Vignesh
2 August 2024, 5:56 pm

பிரபல நடிகராக தமிழ் சினிமாவின் விளங்கிவரும் தனுஷ் முன்னதாக கடந்த 2006 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணமாகி 18 ஆண்டுகள் கடந்த நிலையில், தனுஷ் ஐஸ்வர்யாவும் பிரிந்ததை ரசிகர்களால் இன்னும் ஏற்க முடியவில்லை.

இந்த நிலையில், ஐஸ்வர்யா குறித்து இணையதளத்தில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்னும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீக்காமல் அப்படியே வைத்துள்ளார்.

பிரபலங்கள் பலர் விவாகரத்தை அறிவித்த கையோடு கணவன் அல்லது மனைவியின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். ஆனால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் புகைப்படங்களை நீக்காமல் அப்படியே வைத்துள்ளனர். தற்போது, இந்த விஷயம் இணையதளத்தில் பேசு பொருளாய் மாறி உள்ளது. அதில், ரசிகர்கள் பலரும் இரண்டு பேரும் மறுபடியும் சேர்ந்து வாழுங்க என்று பேசி வருகின்றனர்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!