‘கிரிக்கெட் கதைக்களம்’.. முதன்முறையாக மகள் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் படத்தின் பூஜை – வைரலாகும் போட்டோஸ் இதோ..!

Author: Vignesh
5 November 2022, 4:45 pm

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள லால் சலாம் படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

லால் சலாம் படத்திற்கு இன்று சென்னையில் பூஜை போடப்பட்டது. அதில் லைகா நிறுவன தலைவர் சுபாஸ்கரன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

lal salaam -updatenews360

லைகா நிறுவனம் தயாரிக்கும் லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்க உள்ளார். இதற்கு முன்னர் இவர் 3 மற்றும் வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

lal salaam -updatenews360

கிரிக்கெட் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்க உள்ளனர். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாவர்.

lal salaam -updatenews360

லால் சலாம் படத்தின் மூலம் ஐஸ்வர்யா இயக்கத்தில் முதன்முறையாக நடிக்க உள்ளார் ரஜினிகாந்த். இதில் அவர் நடிக்கும் காட்சிகள் 20 நிமிடங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது.

இப்படத்தில் கதையின் நாயகர்களாக விஷ்ணு விஷாலும், விக்ராந்த்தும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணம், அவர்கள் இருவரும் நன்கு கிரிக்கெட் விளையாடத் தெரிந்தவர்கள் ஆவர்.

lal salaam -updatenews360

லால் சலாம் படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி முடித்து, அடுத்தாண்டு படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

lal salaam -updatenews360
lal salaam -updatenews360
lal salaam -updatenews360
lal salaam -updatenews360
  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 419

    0

    0