எனக்கு கிடைத்த பெரிய வரம்… மேடையில் கலங்கி அழுத ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – வீடியோ!

Author: Rajesh
7 February 2024, 9:27 pm

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்திற்கு ஐஸ்வர்யா , சௌந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஐஸ்வர்யா பிரபல நடிகராக கோலிவுட்டின் உச்சத்தில் இருந்து வரும் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதனிடையே சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஜோடி பிரிந்துவிட்டார்கள். தற்ப்போது தனித்தனியே வாழ்த்து வருகிறார்கள்.

தனுஷ் நடிப்பிலும், ஐஸ்வர்யா திரைப்படம் இயக்குவதில் பிசியாக இருந்து வருகிறார். ஐஸ்வர்யா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து லால் சலாம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா லால் சலாம் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மகன்களை குறித்து பேசி கண்கலங்கினார்.

அதாவது, எனக்கு கிடைத்த பெரிய வரம் என் மகன்கள் தான் நான் இந்த படத்திற்காக கடந்த 2 வருடங்களாக அதன் வேளைகளில் பிசியாக இருந்தேன். அந்த சமயத்தில் என் பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட முடியாது parents மீட்டிங்கிற்கு செல்லமுடியாது. அந்த சமயத்தில் என மகன் ஒன்னும் பிரச்சனை இல்லை அம்மா. நீங்க உங்க வேலையை சிறப்பாக செய்யுங்கள் என என்னை புரிந்துக்கொண்டு எனக்கு சப்போர்ட் செய்தார்கள் என கூறி கண்கலங்கினார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி