தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களின் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தெரிவித்ததை அடுத்து, அவர்களின் பிரிவு குறித்த பல காரணங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. ஆனால் அதற்கான விளக்கத்தை இருவரும் இன்னும் அறிவிக்கவில்லை.
இதனிடையே, தனுஷின் தந்தை இயக்குனர் கஸ்தூரிராஜா வழக்கமாக குடும்பத்தில் நடக்கும் சண்டை தான் அவர்களுக்குள்ளும் இருக்கிறது. இருவருக்கும் விவாகரத்து இல்லை கூறி வருகிறார். சமீபத்தில் கூட செல்வராகவன் பிறந்தநாளுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதனிடையே அவர்கள் இருவரையும் ஒன்று சேர்க்க அனைவரும் எடுத்த முடிவுகள் தற்போது தோல்வியில் முடிந்ததாகவே கூறப்படுகிறது. ரஜினிகாந்திற்காக மனமிறங்கி சேர்ந்து வாழ சம்மதித்தாலும் தனுஷ் தன்னுடைய முடிவை உடனே மாற்றிக் கொள்ள முடியாது என்று தெரிவித்து வருகிறாராம். இதனால், ஐஸ்வர்யாவை மிகுந்த ஆத்திரம் அடைய செய்திருப்பதாகவே கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், தனுசை வெறுப்பேற்ற ஒரு அதிரடியான வேலையை செய்ய முடிவெடுத்திருக்கிறார் என்று தெரிகிறது. தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சொந்த அனுபவங்களை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்றும் அந்த படத்தில், ஹீரோவாக நடிகர் சிம்புவை நடிக்க வைக்க அவர் முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, சினிமா ரீதியில் தனுஷ், சிம்பு இருவருக்கும் இடையே போட்டி இருந்து வருவது என்பது அனைவரும் தெரிந்த விஷயம். ஏற்கனவே மூன்று, வை ராஜா வை ஆகிய படங்களை டைரக்ட் செய்திருக்கிறார். தற்போது ஒரு ஆல்பம் பாடலையும் அவர் இயக்கி வருகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.