மறுமணம் செய்யப்போகும் மகளுக்கு ரஜினி கொடுக்கும் வரதட்சணை – இத்தனை கோடியா?
Author: Rajesh13 February 2024, 7:45 pm
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்திற்கு ஐஸ்வர்யா , சௌந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஐஸ்வர்யா பிரபல நடிகராக கோலிவுட்டின் உச்சத்தில் இருந்து வரும் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதனிடையே சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஜோடி பிரிந்துவிட்டார்கள். தற்ப்போது தனித்தனியே வாழ்த்து வருகிறார்கள்.
தனுஷ் நடிப்பிலும், ஐஸ்வர்யா திரைப்படம் இயக்குவதில் பிசியாக இருந்து வருகிறார். ஐஸ்வர்யா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து லால் சலாம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கு மறுமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது, கர்நாடகாவை சேர்ந்த பிரபல சினிமா தயாரிப்பாளரும் தொழிலதிபருமான ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம். மருமணத்திற்கு வரதட்சணை மட்டும் ரூ.500 கோடி தரவுள்ளாராம் ரஜினி. ஆனால், இது உண்மை செய்தியா? வதந்தியா? என்பது தெரியவில்லை. இதனை ரஜினியோ அல்லது ஐஸ்வர்யாவோ விளக்கம் கொடுத்தால் மட்டுமே உறுதியாகும்.