பத்தலா பத்தலா.. Gym- ல் வெறித்தனம் காட்டும் ஐஸ்வர்யா.. Latest Video.!

Author: Rajesh
22 May 2022, 2:15 pm

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக சுமார் 18 வருடங்களாக வாழ்ந்து வந்திருந்த நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இவர்கள் தங்களது 18 வருட மண வாழ்க்கையை சில மாதங்களுக்கு முன் பிரிவதாக அறிவித்து விட்டனர்.

அதன் பின்னர் இருவரும் அவரவர் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். தனுஷ், வெவ்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். அதேபோல ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் தனக்கு பிடித்தமான சினிமாத்துறையில் தீவிரமாக இயங்க ஆரம்பித்து வருகிறார். ஐஸ்வர்யா இயக்கத்தில் அண்மையில் பயணி எனும் ஆல்பம் வீடியோ வெளியானது. அதில் நடன அமைப்பாளர் ஜானி மாஸ்டர் நடித்து இருந்தார். அந்த ஆல்பம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அவர் சைக்கிளில் செல்வது, உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோக்களை பதிவிட்டு வருவார். அதுபோல தீவிரமாக வியர்க்க விருவிருக்க முயற்சி செய்து வருவதை ஒரு வீடியோவாக பதிவிட்டு உள்ளார்.

  • ajith kumar banner fell down in tirunelveli pss multiplex திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ