ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மாற்றுத்திறனாளியா? சீண்டிய பத்திரிகையாளர்கள் கண்டுகொள்ளாத ரஜினி..!

Author: Vignesh
8 February 2024, 7:33 pm

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.

rajinikanth

முக்கியமாக திறமை இருந்தும் வாய்ப்பில்லாமல் தவித்து வந்த பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் போன்றோருக்கு ரஜினிகாந்தின் படங்கள் திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது. பீஸ்ட் படத்தின் மூலம் நெகட்டிவ் ரிவியூஸ் பெற்ற நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்போது சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படம் அவருக்கு செம கம்பேக் ஆக அமைந்துள்ளது.

aishwarya - updatenews360

இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர். சௌதர்யா கோவா படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர், பாபா, சந்திரமுகி உள்ளிட்ட பட திரைப்படங்களில் கிராபிக் டிசைனராக பணியாற்றியுள்ளார்.

rajini updatenews360

முன்னதாக, சூப்பர் ஸ்டார் மகள் என்று அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தற்போது, இவர் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் ரஜினி நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஒன்பதாம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், மூத்த மகள் ஐஸ்வர்யாவின் ஆரம்ப காலம் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

Aishwarya Dhanush - Updatenews360

அது என்னவென்றால், ஐஸ்வர்யா பிறந்த போது அவருடைய போட்டோ ரஜினிக்கு என்ன குழந்தை பிறந்து இருக்கிறது என்பதை பற்றி அவர் பொதுவெளியில் சொல்லாமலே இருந்து மௌனம் காத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ரஜினிக்கு பிறந்தது பெண் குழந்தை என்பதை தெரிந்து கொண்ட பத்திரிகையாளர்கள். ஐஸ்வர்யாவுக்கு மண்டோதரி என அவர்களே பெயர் வைத்திருந்தனர்.

aishwarya dhanush - updatenews360

ஆனால், இதையெல்லாம் ரஜினிகாந்த் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அது மட்டும் இன்றி ரஜினியின் மகள் மாற்றுத்திறனாளி என்றெல்லாம் செய்திகள் வெளியிட்டு ரஜினியை சீண்டி உள்ளனர். அப்போதும், மௌனம் காத்த ரஜினி மகள் பற்றிய எந்த தகவலையும் பொதுவெளியில் தெரிவிக்க வில்லையாம். பல வருடங்கள் கழித்து தான் ரஜினியின் மகள் பெயர் ஐஸ்வர்யா என்றும், அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியானது.

aishwarya dhanush - updatenews360

மேலும், மன்மதன் படத்தின் பூஜையில் தான் முதன்முதலாக ஐஸ்வர்யா மீடியா முன்பே தோன்றியுள்ளார். சின்ன வயதிலிருந்து ரஜினிகாந்த் மகள்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் கசிய விடாமல் பார்த்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Annamalai Warning About VijayTrisha Controversy விஜயுடன் திரிஷா சென்றால் தப்பா? சும்மா விட மாட்டேன் : பகிரங்க எச்சரிக்கை!
  • Views: - 420

    0

    0