கணவரை நம்பி காலத்தை ஓட்டல…. தனி ஆளா கெத்து காட்டும் ஐஸ்வர்யா – சொத்து எத்தனை கோடி தெரியுமா?

Author: Rajesh
27 December 2023, 4:32 pm

கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.

தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.

பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், இருவரும் இன்றுவரை சட்டபூர்வமாக விவாகரத்து செய்ய அணுகவில்லை என்று கூறப்பட்ட நிலையில், தனுஷ்சை பிரிந்த பின் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா தன் அப்பா ரஜினிகாந்த்தை வைத்து சிறப்பு தோற்றத்தில் நடித்துவரும் லால்சலாம் படத்தினை இயக்கி வரும் நிலையில், ஐஸ்வர்யா தனுசை பிரிந்து ஒரு வருடமான நிலையில், அவரவர் தங்களது கெரியரில் கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.

Aishwarya RAjinikanth - Updatenews360

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி வியக்க வைத்துள்ளது. ஆம், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திற்கு ரூ.40 கோடி சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு இவருக்கு சொந்தமாக ஒரு சொகுசு வீடு, லக்ஸரி கார்கள், கோடிக்கணக்கில் தங்க, வைர நகைகள் உள்ளிட்டவை வைத்திருக்கிறார். எனவே தனுஷை பிறந்தாலும் எதிர்கால கவலையின்றி ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் ஐஸ்வர்யா.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 453

    0

    0