ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு…கோவிலில் சிறப்பு வழிபாடு.!

Author: Selvan
6 March 2025, 6:55 pm

பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா துறையில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என போராடி வருகிறார்.

இதையும் படியுங்க: 20 ஆண்டுகளாக சம்பளம் இல்லை…பாலிவுட்டில் அசத்தும் பிரபல நடிகர்.!

அவருடைய முன்னாள் கணவர் தனுஷ் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வருவதால் தற்போது இவரும்,தன்னுடைய இயக்குனர் அவதாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான “லால் சலாம்” படத்தை அவர் இயக்கியிருந்தார்.இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தாலும்,திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.அதன்பிறகு,அவர் நடிகர் சித்தார்த்துடன் புதிய படத்திற்கு இணைவதாக செய்திகள் வெளியானது.ஆனால் அதன் பிறகு எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.

இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது அடுத்த படத்திற்கான கதையை எழுதி முடித்துள்ளார்.திருத்தணியில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்ற அவர்,தான் எழுதிய திரைக்கதையை முருகன் காலடியில் வைத்து வழிபட்டுள்ளார்.இதனால், அவர் அடுத்த பட அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் எந்த வகை கதையாக இருக்கும்,எந்த நடிகர்கள் இதில் நடிக்க உள்ளனர், தயாரிப்பு நிறுவனம் எது? போன்ற தகவல்கள் கூடிய விரைவில் வெளிவர வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்படுகிறது.

  • Aadukalam movie casting controversy என்கூட நடிக்க மறுத்தார்..தனுஷ் செய்தது சரியா..வெளிப்படையாக பேசிய பார்த்திபன்.!
  • Leave a Reply