என்னது அப்பா ரஜினி என்னை திட்டினாரா? ” லால்சலாம்” ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை வெளியிட்ட ஐஸ்வர்யா!

Author: Shree
19 May 2023, 11:49 am

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து ரஜினி தனது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து தற்போது மும்பையில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளை படமாக்குக்கி வருகிறார்கள்.

இப்படத்தில் மொய்தீன் பாயாக ரஜினி நடித்து வருகிறார். அண்மையில் இப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளானது. அதில் மும்பை பின்னணியில் இஸ்லாமிய தோற்றத்தில் ரஜினிகாந்த் நடந்து வருவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம் எனவும் போஸ்டரில் குறிப்பிட்டிருந்தனர். அதே சமயம், சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் எனவும் பதிவிட்டுள்ளனர். இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக ரஜினி இப்படத்தில் நடித்துள்ளார். இருந்தாலும் அவரது தோற்றம் ட்ரோல் செய்யப்பட்டது.

இதனிடையே ரஜினி மகள் ஐஸ்வர்யாவுடன் லால்சலாம் படத்தின் படப்பிடிப்பில் சண்டைபோட்டு திட்டிவிட்டு சென்னை திரும்பிவிட்டதாக செய்திகள் இணையத்தில் வெளியாகியது. காரணம் இப்படத்தின் ஷூட்டிங்காக ரஜினி மும்பை சென்று வெறும் மூன்று நாட்கள் மட்டுமே நடித்தாராம். மற்ற நேரம் அவருக்கு வேலையே இல்லாமல் சும்மாவே இருந்தாராம். இதனால் ஐஸ்வர்யாவின் நிர்வாகத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவிடம் கறாராக பேசிவிட்டு மும்பையில் இருந்து திரும்பியாக செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் ஐஸ்வர்யா, ரஜினிகாந்த் லால்சலாம் படத்தில் நடித்து வரும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை வெளியிட்டு வதந்தி செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக இதைப்பார்த்த ரஜினியின் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

விஜய்யை வைத்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் பீஸ்ட் படத்தை இயக்கி பெரும் தோல்வியை கொடுத்தார் நெல்சன். அதன் பின்னர் தற்போது ரஜினிகாந்த் வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர். முஸ்லீம் நபராக இப்படத்தில் நடித்துள்ள ரஜினி மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

இதற்காக ரஜினி மும்பைக்கு புறப்பட்டு சென்று அப்படத்தின் ஆரம்ப வேளைகளில் ஆர்வம் காட்டி வந்தார். இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டிருந்தது. இதில் கலவரம் வெடிக்க, ரஜினிகாந்த் இஸ்லாமியர் போல தாடி வைத்து, தொப்பி அணிந்து, கண்ணாடி அணிந்து ஸ்டைலாக வர மாதிரி போஸ்டர் வடிவமைக்கப்பட்டு இருந்தது.ஆனால், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி சிலர் போஸ்டர் மோசமாக இருக்கிறது என்று விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங்காக ரஜினி மும்பை சென்று மூன்று நாட்கள் மட்டுமே ஷூட்டிங் சென்றாராம். மற்ற நேரம் சும்மாவே இருந்துள்ளாராம். இதற்கு காரணம் ஐஸ்வர்யாவின் நிர்வாகத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவிடம் கரராக பேசிவிட்டு மும்பையில் இருந்து திரும்பி சென்னை வந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 503

    0

    0