“ஒய் திஸ் கொலவெறி” பாடல் சுத்த வேஸ்ட்… அனிருத் மீது ஐஸ்வர்யாவுக்கு இவ்வளவு வெறுப்பா?
Author: Rajesh10 February 2024, 4:51 pm
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியாக இருந்து வந்தவர்கள் ஐஸ்வர்யா – தனுஷ். இவர்கள் காதலித்து கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் மிகச்சிறந்த திறமையை தன்னுள் வைத்திருந்தாலும் அதை படத்திற்கு படம் வெளிக்காட்ட பெரிதும் உதவியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.
ஆம் தன் மருமகன் என்பதால் அவரின் படங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் ரஜினி என்ற பேக்கப் உடன் வெளியாகி கிடுகிடுவென முன்னனி நடிகர் ஆனார். இன்று அசைக்க முடியாத இடத்தில் டாப் நடிகர் என்ற அந்தஸ்தில் இருக்கும் தனுஷ் ஒரு கட்டத்தில் ரஜினியின் உதவிகளை மறந்துவிட்டு அவரை துட்க்ஷம் என கருதி விட்டார் என்று தான் சொல்லவேண்டும்.
ஆம் தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவை திடீரென பிரிந்துவிட்டார். தற்போது இவர்கள் இருவரும் தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், இருவரும் இன்றுவரை சட்டபூர்வமாக விவாகரத்து செய்ய அணுகவில்லை என்று கூறப்படுகிறது.
ஐஸ்வர்யா தனுஷை பிரிந்த பின் அந்த சோகத்தில் மூழ்கி முடங்கிவிடாமல் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். ஆம், ஐஸ்வர்யா தன் அப்பா ரஜினிகாந்த்தை வைத்து சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் படத்தினை இயக்கியுள்ளார். இப்படம் உலகம் முழுக்க நேற்று வெளியாகியுள்ளது. லால் சலாம் இசைவெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யாவின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா, 3 படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் படத்திற்கு எந்த விதத்திலும் உதவவில்லை என்று கூறியுள்ளார். அந்த பாடல் முழு படத்தையே விழுங்கிவிட்டது. அதுமட்டும் இன்றி படத்தின் போக்கையே அது மாற்றிவிட்டது. சம்மந்தமே இல்லாமல் எடுத்துவிட்டோமே என கஷ்டப்பட்டேன் என கூறினார். ஐஸ்வர்யாவின் இந்த பேச்சு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
காரணம் அந்த பாட்டு மெகா ஹிட் அடித்து மொழிகளை தாண்டி ரசிகர்களை கவர்ந்தது. 3 படத்தின் மூலம்தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் அனிருத் இசையில் வெளிவந்த அத்தனை பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அவ்வளவு ஏன்… அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கூட இந்தப் பாட்டை கேட்டு வெகுவாக ரசித்து தனுஷ் உள்ளிட்ட படக்குழுவுக்கு விருந்து வைத்தார். அப்படியிருக்கும்போது ஐஸ்வர்யா இப்படி சொல்லிவிட்டாரே? ஒரு வேலை அனிருத் மீது ஏதேனும் பிரச்சனையா என்ற கோணத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.