தனுசுக்காக அந்த நடிகரிடம் ‘டீல்’ செய்த ஐஸ்வர்யா : அதனால்தான் இப்படி ஒரு முடிவா?

Author: Udayachandran RadhaKrishnan
5 January 2023, 4:46 pm

ஒரு நடிகராக கோலிவுட் வந்த தனுஷ் பின்னர் தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் அவதாரம் எடுத்தார். இதையடுத்தே ஒரு சுபயோக சுபதினத்தில் இயக்குநர் அவதாரம் எடுத்தார்.

காலம் காலமாக வேட்டி, சட்டை போட்டு வந்து மிரட்டிய ராஜ்கிரணுக்கு ஜீன்ஸ், டி சர்ட் கொடுத்து ஸ்டைலாக்கி அசத்தலாக படத்தை எடுத்திருந்தார் தனுஷ்.

ப. பாண்டி படத்தை பார்த்தவர்கள் இது தனுஷ் இயக்கிய முதல் படம் என்றே சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கிறது என்றனர். இந்நிலையில் அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டாராம்.

தனுஷ் இயக்கவிருக்கும் படத்தில் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா, விஷ்ணு விஷால் நடிப்பது உறுதியாகிவிட்டதாம். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தனுஷின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் படத்திலும் விஷ்ணு விஷால் தான் நடிக்கிறார். ஒரே நேரத்தில் ஐஸ்வர்யா, தனுஷ் படங்களில் நடிக்க விஷ்ணு விஷாலுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறதே என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

படத்தை இயக்குவதுடன் நடிக்கவும் செய்கிறார் தனுஷ். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படத்திற்கு விஷ்ணு விஷாலை முன்பு ஒப்பந்தம் செய்தார்கள்.

ஆனால் தயாரிப்பு நிறுவனத்தால் லாபம் கிடைக்காமல் நஷ்டம் தான் ஏற்பட்டது. இதையடுத்து வுண்டர்பார் நிறுவனத்தை கைவிட்டார் தனுஷ்.

அப்பொழுது போடப்பட்ட டீலிங்கை அடுத்து தான் தற்போது தான் இயக்கவிருக்கும் படத்தில் விஷ்ணு விஷாலை நடிக்க வைக்கிறார் தனுஷ் என்று கூறப்படுகிறது.

வுண்டர்பார் பிலிம்ஸ் டீலிங்கை மனதில் வைத்து தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் விஷ்ணு விஷாலுக்கு வாய்ப்பு கொடுத்திருப்பார் போன்று என்று பேசப்படுகிறது.

எது எப்படியோ, விஷ்ணு விஷாலுக்கு ஜாக்பாட் தான். தனுஷ் இயக்கும் படம் விஷ்ணு விஷாலின் கெரியரில் முக்கியமான படமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை என்கிறார்கள் ரசிகர்கள்.

ப. பாண்டியை அடுத்து நான் ருத்ரன் என்கிற பட வேலையை துவங்கினார் இயக்குநர் தனுஷ். அந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, நாகர்ஜுனா, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் நடித்தார்கள். முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படம் கைவிடப்பட்டது. இந்நிலையில் நான் ருத்ரனில் நடித்த எஸ்.ஜே. சூர்யாவுக்கு மீண்டும் தன் படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் தனுஷ்.

வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் வாத்தி படம் வரும் பிப்ரவரி மாதம் 17ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அதன் பிறகு கேப்டன் மில்லர் வரும். கேப்டன் மில்லர் வேலையை முடித்த பிறகு தன் படத்தை இயக்கத் துவங்குவாராம்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ