ரகசிய காதல்… அடுத்த திருமணத்திற்கு ரெடி ஆன மகள்…. மாலத்தீவுக்கு ரஜினி சென்றதன் பின்னணி இது தான்!

Author: Shree
20 July 2023, 2:21 pm

கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.

இப்படியான நேரத்தில் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், இருவரும் இன்றுவரை சட்டபூர்வமாக விவாகரத்து செய்ய அணுகவில்லை என்று கூறப்பட்டது.

தனுஷை பிரிந்த பின் மன உளைச்சலில் இருக்கும் மகளை பார்த்து வருத்தப்பட்ட ரஜினி நீ ஒரு படத்தை இயக்குமா அதில் நான் நடிக்கிறேன் என கூறி மக்களை வேலை விஷயமாக பிசியாக வைத்திருந்தால் மனஉளைச்சளில் இருந்து மீண்டு வருவார் என ரஜனி யோசனை செய்து மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா தனுசை பிரிந்து ஒரு வருடமான நிலையில் இதுவரை ஐஸ்வர்யா தனுஷ் உடன் சேர்ந்து வாழும் எண்ணத்தில் இல்லையாம். தனுஷ் அவ்வப்போது தனது மகன்களை பார்த்துக்கொள்ளும் விதமும் அவர்களுடன் அன்பாக பழகுவதை பார்த்து ரஜினி தன் மகளை தனுஷுடன் சேர்ந்து வாழ எடுத்து சொன்னாராம்.

ஆனால் அதையெல்லாம் கேட்காத ஐஸ்வர்யா தற்ப்போது ஒரு இளம் நடிகரை காதலித்து வருவதாகவும் அவரை இரண்டாம் திருமணம் செய்ய உள்ளதாகவும் செய்திகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதை கேட்டு கோபமடைந்த ரஜினி மகளின் செயலால் மிகுந்த வருத்தத்திற்கு ஆளாகியுள்ளார். அதற்காக தான் அண்மையில் மாலத்தீவிற்கு தனியாக ட்ரிப் சென்றார் என பயில்வான் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ