பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்… மனம் உருகிய தனுஷ்..?

Author: Rajesh
5 March 2022, 8:06 pm

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் பிரிந்து விட்டதாக சமீபத்தில் அறிவித்த நிலையில் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க பல்வேறு முயற்சிகள் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனுஷ் அண்ணன் இயக்குனர் செல்வராகவன் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் செல்வராகவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். செல்வராகவனை கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்தில் எனது குரு, நண்பர், அப்பா அந்தஸ்தில் உள்ள செல்வராகவன் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஐஸ்வர்யாவின் இந்த பதிவை பார்த்து தனுஷின் குடும்பத்தினர் அசந்துவிட்டதாகவும், இந்த பதிவினால் நடிகர் தனுஷ் மனம் உருகியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!