சோதனை மேல் சோதனை.. திருட்டு சம்பவத்தால் வருமான வரி வரை சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!
Author: Vignesh28 March 2023, 5:00 pm
ரஜினியின் மூத்தமகளும் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் நகைகள் காணாமல் போனதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இதில் கிட்டத்தட்ட 60 சவரன் நகைகள் காணாமல் போனதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.
இதனிடையே போலிஸாரின் கிடுக்குபிடி விசாரணையில் வீட்டில் பல ஆண்டுகளாக வேலை செய்து வந்த வேலைக்காரியும், அவரது கார் ட்ரைவரும் பிடிபட்டனர். அந்த வகையில் வேலைக்காரியிடம் 100 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடுத்த புகாரில் 60 பவுன் மட்டுமே திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் போலீசார் விசாரணையில், கேள்விக்கேட்ட நிலையில் மழுப்பலான பதிலை தொரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, தனக்கு மீதமுள்ள நகைகளை பற்றி தெரியவில்லை, ஒருவேளை எனது நண்பர்கள் அன்பளிப்பாக கொடுத்த நகையாக இருக்கலாம் என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதில் தெரிவித்துள்ளார். இவரது பதிலின் மீது சந்தேகமடைந்த போலீசார், கணக்கில் வராத நகைகள் குறித்து வேலைக்காரியிடம் மேலும் விசாரணை மேற்கொண்ட போது தலையில் குண்டை தூக்கிப்போடும் விதமாக தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பினாமி என்று தைரியமாக பதில் அளித்ததாகவும், தற்போது கணக்கில் வராமல் இதுபோன்று எவ்வளவு சொத்துக்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சேர்த்து வைத்துள்ளார் என்ற கேள்வி எழுப்பப்பட்டு ரஜினியிடம் தற்போது இந்த பிரச்சனை அவரது வீடு வரை வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், இன்னும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மற்ற சொத்துக்கள் மற்றும் வீடுகளில் எவ்வளவு கணக்கில் வராத சொத்துக்கள் உள்ளது என்பதை அறிய வருமான வரித்துறை வரை இந்த விஷயம் செல்லும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாகவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை விவாகரத்து செய்துக்கொண்ட போது, ரஜினி மிகவும் தன் மகளின் வாழ்க்கையை நினைத்து மன வேதனையில் இருந்த நிலையில் இப்போது இந்த விசயத்தால், அவருக்கு உடல் நிலை கூட சரியில்லாமல் போனதாகவும், எல்லாம் கடந்தது போல இதையும் கடந்து வருவார் ரஜினி என்றும், மகளின் கனவு பணியான இயக்குனர் அவதாரத்துக்கு பச்சைக்கொடி காட்டிய அவருக்கு இந்த வயதில் அப்படி ஒரு நிலையா என ரசிகர்கள் வேதனை பட்டு வருகின்றனர்.
மேலும் தற்போது, லைக்கா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ள லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவும் ரஜினி ஒப்புக்கொண்டார். இப்படி தனது மகளுக்காக இறங்கி வந்த ரஜினிக்கு, தேரை இழுத்து தெருவில் விட்ட கதையாக தனது மகள் செய்த இந்த காரியத்தால் மேலும் கவலையடைந்து உடல்நிலை பாதிப்புக்கு உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.