மணிரத்தினத்தால் என்னை நானே செருப்பால அடிச்சுக்கிட்டேன்.. ஐஸ்வர்யா பாஸ்கரன் எமோஷனல்..!
Author: Vignesh23 March 2024, 11:37 am
நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் 70 -களில் முன்னணி நடிகையாக வலம் வந்த லட்சுமியின் மகள். இவர் “நியாயங்கள் ஜெயிக்கட்டும்” என்ற படத்தின் மூலம் 1990 -ம் ஆண்டு தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் என்று சொல்லலாம். பல படங்களில் நடித்து வந்த இவர், 1994 -ம் ஆண்டு தன்வீர் என்பவரை திருமணம் செய்து கொண்டு, சில ஆண்டுகளுக்கு பிறகு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்தார். இதன் பின் தன்வீர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு அவருடைய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
இதனிடையே, ஐஸ்வர்யா பாஸ்கரன் தற்போது சொந்தமாக யூடிப் சேனல் ஒன்றை துவங்கி நடத்தி வருகிறார். அதில் சோப்பு மற்றும் பெண்கள் அழகு சாதன பொருட்களை விளம்பரம் செய்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகிறார்.
இதனிடையே, சமீபத்தில் பேட்டி ஒன்றில், சில சம்பவங்களை பற்றி ஐஸ்வர்யா பாஸ்கர் பகிர்ந்துள்ளார். அதாவது, ரோஜா படம் மிஸ் ஆனதால் தான் தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்டேன் என்று நீங்கள் கூறிய விஷயம் வைரலாகி வருகிறது என்ற கேள்விக்கு ஐஸ்வர்யா பதில் அளித்துள்ளார். அதில், இந்த விஷயம் நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு சொன்னது. என் படத்தினை கமிட் செய்வது என் பாட்டி தான், அப்போது, தெலுங்கு படத்தில் நடிக்க என்னை கமிட் செய்திருக்கிறார் பாட்டி.
நாளை ஹைதராபாத் செல்ல வேண்டும் முதல் முறை மணிரத்தினம் தளபதி படத்தில் நடிகை ஷோபனா ரோலில் நடிக்க நான் தான் இருந்தது. அப்போது, ஒரு படத்தில் கமிட்டாகி விட்டேன் என்று பாட்டி கூறிவிட்டார். அதுவும், போச்சு அதேபோல் இரண்டாவது முறை தெலுங்கு படத்தில் கமிட் ஆகியபோது ரோஜா பட வாய்ப்பு வந்தது. அப்போது, தெலுங்கு படத்தில் கமிட்டானாம். அப்போது, ரோஜா படத்திற்காக கேட்டபோது, தெலுங்கு படத்திற்காக 40 நாள் டேட் கொடுத்திருக்கிறோம்.
பின்பு படமே நின்னு போச்சு அதன் பின்னர், ரோஜா படம் வெளியாகிய அந்த படத்தை நான் பாட்டி பார்த்தோம் ருக்மணி என் பாட்டி பெயர் என்பதால், ரோஜா படத்தின் ருக்மணி பாடல் கேட்கும்போது கோபத்தில் இருந்தேன். புது வெள்ளை மழை பாடல் கேட்கும் போது வியப்பிலிருந்தேன். கோயம்புத்தூர் சென்று அப்பா அப்பார்ட்மெண்ட் போய்விட்டு செருப்பை எடுத்து அடித்துக் கொண்டேன்.
அதன் பின்னர், மணிரத்தினம் இயக்கத்தில் திருடா திருடி படத்தில் நடிக்க டெஸ்ட் நடந்தது. அப்போதுதான், ஹிந்தி படத்திற்கு டேட் கொடுத்திருந்தாங்க. மணிரத்தினத்தை பலமுறை பார்த்திருக்கிறேன் என்று ஐஸ்வர்யா தெரிவித்திருக்கிறார். மேலும், தேவர் மகன் படத்தில் நானும் மீனாவும் கமிட்டானதும், திடீரென காஸ்ட் மாறியது. ஆறு படத்தில், நான் நடிக்கவிருந்த கதையை எனக்காக ஹரி மாற்றியதால் தான் அந்தப் படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.