அனிரூத்-ஆ வேண்டவே வேண்டாம்.. கடுப்பாகி கத்திய ரஜினிகாந்த் மகள்..!

Author: Vignesh
9 February 2024, 5:22 pm

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.

rajinikanth

முக்கியமாக திறமை இருந்தும் வாய்ப்பில்லாமல் தவித்து வந்த பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் போன்றோருக்கு ரஜினிகாந்தின் படங்கள் திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது. பீஸ்ட் படத்தின் மூலம் நெகட்டிவ் ரிவியூஸ் பெற்ற நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்போது சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படம் அவருக்கு செம கம்பேக் ஆக அமைந்துள்ளது. இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர்.

rajini updatenews360

முன்னதாக, சூப்பர் ஸ்டார் மகள் என்று அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தற்போது, இவர் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் ரஜினி நடித்துள்ளார். எட்டு வருடம் கழித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படம் இன்று ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

soundarya rajinikanth

அவரை தொடர்ந்து இரண்டாம் மகள் சௌந்தர்யா கோச்சடையான் விஐபி 2 படத்தினை தொடர்ந்து தற்போது மற்றொரு படத்தையும் இயக்க திட்டமிட்டுள்ளாராம். அப்படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். தயாரிப்பாளர் தானு தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் புதிய படத்தினை சௌந்தர்யா இயக்க உள்ளார். இந்த படத்திற்கு, இசையமைக்க இசையமைப்பாளர் அனிருத்தின் பெயரை தாணு கூறியுள்ளார், ஆனால், கடுப்பாகி சௌந்தர்யா அனிருத் எல்லாம் வேண்டாம் என்று கூறி கண்டிஷனும் போட்டு இருக்கிறாராம். அனிருத் அதிகமாக ஆட்டிட்யூட் காட்டி வருவதாகவும், ஆதனால் வேண்டாம் என்ற காரணத்தை கூறி ஜீவி பிரகாஷ் குமாரையும் புக் செய்ய முடிவெடுத்துள்ளாராம் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 460

    0

    0