கோலிவுட் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பிரபல நடிகர் தனுஷை சுமார் 18 வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மிகவும் சந்தோஷமான ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருந்த இவர்களுக்கு, யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற உள்ளதாக, இருவரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் மூலம் அறிவித்தது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் தங்களுடைய பிள்ளைகள் சந்தோஷத்திற்காக, அவ்வப்போது அவர்களின் பள்ளி விழாக்களில் இருவரும் ஒன்றாக சந்தித்துக் கொள்ளும் சம்பவங்களும் நிகழ்கிறது.
இருப்பினும் இவர்கள் தங்களுடைய விவாகரத்து முடிவை கைவிட்டு விட்டு சேர்ந்து வாழ உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.
விவாகரத்துக்கு பின்னர் ஆன்மீகத்திலும், திரைப்பட பணிகளிலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முழு கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்து வரும் கிரிக்கெட் தொடர்புடைய ‘லால் சலாம்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது இந்த படத்தின் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முன்னணி நடிகைகளுக்கு நிகராக போட்டோ ஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் கோட் சூட் மற்றும் சல்வார் அணிந்து, இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
40 வயதிலும், இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும்… இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக இந்த போட்டோ ஷூட் அமைந்துள்ளதாக கமெண்டில் தெறிக்க விட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.