பெயரை மாற்றிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ..!- தனுஷ் – ஐஸ்வர்யா இணைய வாய்ப்பில்லை எனத் தகவல்..

Author: Rajesh
15 February 2022, 7:22 pm

தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களின் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தெரிவித்ததை அடுத்து, அவர்களின் பிரிவு குறித்த பல காரணங்கள் வெளியாகி வருகிறது. ஆனால் அதற்கான விளக்கத்தை இருவரும் இன்னும் அறிவிக்கவில்லை.

இதனிடையே, தனுஷின் தந்தை இயக்குனர் கஸ்தூரிராஜா வழக்கமாக குடும்பத்தில் நடக்கும் சண்டை தான் அவர்களுக்குள்ளும் இருக்கிறது. இருவருக்கும் விவாகரத்து இல்லை கூறி வருகிறார். இந்த விவாகரத்து முடிவை இருவரும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் ஐஸ்வர்யா தனது குழுவினருடன் ஒரு பாடல் வீடியோ தயாரிப்புக்காக உரையாடும் புகைப்படங்களும், இணையத்தில் சமீபத்தில் வைரலாகி இருந்தது.
அதன் பின்னர், ஐஸ்வர்யாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து, சில நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். பின்னர் ஐஸ்வர்யா மீண்டும் பாடல் வீடியோவை உருவாக்கும் வேலைகளில் களமிறங்கினார். தற்போது, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புதிய பாடல் குறித்த ப்ரோமோ வீடியோவை ஐஸ்வர்யா பகிர்ந்துள்ளார்.

பல மொழிகளில் தயாராகும் இந்த பாடலை, தெலுங்கில் சாகரும், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த்தும், தமிழில் அனிருத்தும் பாடுகின்றனர். இதன் முழு வீடியோ விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த பாடலின் ப்ரோமோ வீடியோவில் ஐஸ்வர்யா தனது பெயரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றியுள்ளார். இதனால் இருவரும் இணையும் வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 2341

    6

    3