என்ன சொசைட்டி இது?வாழ்வதற்கே அருவருப்பாக உள்ளது; ஐஸ்வர்யாராய் வேதனை..

Author: Sudha
16 July 2024, 2:07 pm

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சென்ட் திருமணம் சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சல்மான்கான், அர்பிதா கான் இணைந்து மணக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.அது போலவே ஐஸ்வர்யாராய் மணமக்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஆனால் சல்மான்கானும், ஐஸ்வர்யாராயும் ஒன்றாக திருமண விழாவில் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போன்று சித்தரித்து புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

முன்னாள் காதலன் சல்மான்கானுடன் நெருக்கம் காட்டும் ஐஸ்வர்யா என செய்தி இந்த புகைப்படத்துடன் வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யாராய் இது பற்றி சொல்லும் போது, ‛‛எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. திருமணமான ஒரு பெண்ணை அதுவும் ஒரு பெண் பிள்ளைக்கு தாயான ஒரு பெண்ணைப் பற்றி இப்படி புரளியை கிளப்பும் இந்த சமூகத்தில் வாழ்வதற்கே அருவருப்பாக உள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!