போதையில் தகராறு செய்த பிரபல நடிகர்.. நடிகரின் மனைவியிடம் கதறிய ஐஸ்வர்யா ராஜேஷ்: இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
Author: Udayachandran RadhaKrishnan29 January 2023, 8:00 pm
Vjவாக தனது வாழ்க்கையை தொடங்கி, தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர்தான் இந்த ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.
விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெடும் ஐஸ்வர்யா ராஜேஷின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மனைவிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவரிடம் உங்களுடைய கணவர் குடித்துவிட்டு போதையில் என்னிடம் தகராறு செய்து கொண்டிருக்கிறார். இவர் குடித்துவிட்டு வண்டி ஓட்டி வந்திருக்கிறார். உடனடியாக காவல் நிலையத்துக்கு வாருங்கள் என்று பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மனைவியிடம் பிராங்க் செய்த வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக நடிகர் நடிகைகள் இது போன்ற பிராங்க் நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்துவது வாடிக்கை. அந்த வகையில், பிரபல யூடியூப் சேனல் பேட்டி ஒன்றில், ரோபோ சங்கரின் மனைவிக்கு போன் செய்த ஐஸ்வர்யா ராஜேஷ் நான் தி-நகர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஷாலினி பேசுகிறேன். உங்களுடைய கணவர் குடித்துவிட்டு வண்டி ஓட்டி வந்திருக்கிறார். இதனால் ஒருவர் காயம் அடைந்து இருக்கிறார். நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசுகிறார்.
இதனை கேட்டு பதறிய ரோபோ சங்கரின் மனைவி, மேடம் அவர் எப்போதும் தெளிவாகத்தான் இருப்பார் என்று யாராவது நண்பர்கள் சந்தித்து இருப்பார் அதனால்தான் இப்படி ஆகிவிட்டது என்று பேசுகிறார். ஆனால், தொடர்ந்து அவருடைய மனைவியை மிரட்டிக்கொண்டே இருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு கட்டத்தில் நான் பிராங்க் செய்கிறேன் என்று அவரிடம் கூறியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.